sent_token
stringlengths
1
43.3k
லெப்டினன்ட் கர்னல் அனுப் குமார் சக்சேனா இவரது தந்தையாவார்.லெப்டினன்ட் கர்னல்.
அன்சுமான் இவரது சகோதரராவார்.
இருவருமே இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர்கள்.
குஞ்சன் புதுதில்லியில் உள்ள டெல்லி பல்கலைக்கழகத்தின் ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றவராவார்.
இந்திய விமானப்படை சேவை 1996 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் விமானியாக சேர்ந்த ஆறு பெண்களில் குஞ்சனும் ஒருவர்.
இவர்களின் குழு இந்திய விமானப்படைக்கான நான்காவது பெண் விமானப் படைப் பயிற்சி குழுவாகும்.
.
சக்சேனாவின் முதல் பதவியானது உதம்பூரில் இயங்கிவரும் 132 முன்னோக்கு பகுதி கட்டுப்பாட்டின் எஃப்ஏசி ஒரு பகுதியான விமான லெப்டினன்டாக பொறுப்பேற்றதே குஞ்சனின் முதல் விமானப்படை வேலையாகும்.
கார்கில் போரின்போது ஸ்ரீநகரை மையமாகக் கொண்டு விமானங்களில் பறந்து போர்முனைக்கு சென்ற போது குஞ்சனுக்கு இருபத்திநான்கு வயது மட்டுமே.
மேலும் கார்கில் போரில் ஆபரேஷன் விஜய்யின் ஒரு பகுதியாக காயமடைந்தவர்களை வெளியேற்றுவதைத் தவிர திராஸ் மற்றும் பட்டாலிக் ஆகிய லடாக்கின் முன்னோக்கிப் பகுதிகளில் உள்ள போர்த்துருப்புக்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்லவும் எதிரி நிலைகளை வரைபடமாக்குவது போன்ற கண்காணிப்புப் பணிகளையும் செய்துள்ளார்.
தற்காலிக தரையிறங்கும் மைதானங்கள் 13000 முதல் 18000 அடி உயரம் மற்றும் எதிரிகளின் தாக்குதல்கள் போன்றவைகளை சமாளித்துள்ள குஞ்சன் ஸ்ரீநகரை தளமாகக் கொண்ட பத்து விமானிகளில் ஒருவராவார் மேலும் போரின் போது நூற்றுக்கணக்கான விமானங்களை ஓட்டி 900 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் காயமடைந்தவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்களை சமதளப் பகுதிகளுக்கு கொண்டு வந்துள்ளார் குஞ்சன் மட்டுமே இந்திய ஆயுதப்படைகளில் கார்கில் போர் மண்டலங்களுக்கு பறந்த ஒரே பெண் விமானியாவார்.
2004 ஆம் ஆண்டில் ஹெலிகாப்டர் ஓட்டியாக பணிபுரிந்த அவரது வாழ்க்கை எட்டு ஆண்டுகளுக்கு பின்பாக முடிவுக்கு வந்தது.
தனிப்பட்ட வாழ்க்கை சக்சேனாவின் தந்தை அனுப் சக்சேனா இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக இருந்தார்.
விங் கமாண்டராக இந்திய விமானப்படையில் பணியாற்றி வரும்விமானி கவுதம் நரேன் குஞ்சனின் கணவராவார்.
இவர் இந்திய விமானப்படையின் 17 ஹெலிகாப்டரின் ஓட்டுனர் ஆவார்.
மேலும் தேசிய பாதுகாப்பு கல்விநிலையத்தில் பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார் இந்த கல்விநிலையம் உலகின் முதல் முப்படை அகாடமி ஆகும்.
இத்தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளார்.
மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்பு1975 பிறப்புகள் பகுப்புஇந்தியப் பெண்கள் பகுப்புஇந்தியப் பெண் சாதனையாளர்கள் பகுப்புஇந்திய வான்படை வீரர்கள் பகுப்புஇந்திய வான்படை
மின்டி அகர்வால் இந்தியாவின் அரியானா மாநிலத்தின் அம்பாலாவைச் சேர்ந்த இந்திய விமானப் படையின் பிரிவு தலைவரும் இந்திய விமானப் படையின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளருமாவார்.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியாபாகிஸ்தான் எல்லை பிரச்சனையின் போது இந்தியாவின் வான் பாதுகாப்பை வழிநடத்திய குழுவில் மின்டி இடம்பெற்றிருந்தார்.
மேலும் பாகிஸ்தானின் எப்16 சண்டை ஃபால்கன் விமானத்தை சுட்டு வீழ்த்த உத்தரவிட்ட அதிகாரியுமாவார்.
இவரது போர் மோதல்கள் அல்லது பகைமையின் போது உயர் வரிசையின் அளித்துள்ள சிறப்பான சேவையை அங்கீகரித்து ஆகஸ்ட் 2019 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட ஆயுதப் படை வீரர்கள் மற்றும் துணை ராணுவப் படைகளின் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் முதன்மையான யுத் சேவா பதக்கம் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இவ்விருதைப் பெற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியப் பெண்கள் பகுப்புஇந்தியப் பெண் சாதனையாளர்கள் பகுப்புஇந்திய வான்படை வீரர்கள் பகுப்புஇந்திய வான்படை
ஜஸ்விந்தர் கவுர் இந்தியாவின் பஞ்சாப்பின் கரார் என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்த பயணிகள் விமானஓட்டியாவார்.
பஞ்சாப் அரசுப் பணியாளரான தந்தைக்கும் குடும்பத்தலைவியான தாய்க்கும் முதல் குழந்தையாக பிறந்துள்ள ஜஸ்விந்தர் சிறுவயதிலேயே வானத்தில் பறப்பதை பற்றி கனவுகளைக் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
தனது பதினாறாவது வயதிலேயே விமானியாக வேண்டும் என முடிவெடுத்துள்ள இவரின் குடும்பத்தினரும் உறவினர்களும் இந்திய விமானப்படை விமானியாக அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால் பயணிகள் மற்றும் வணிக போக்குவரத்து விமானியாகவேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்துள்ளார் அதற்காக தனது நகரத்தில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தொலைவில் இருந்த தனியார் விமான பயிற்சி பள்ளியில் சேர்ந்து பயின்றுள்ளார்.
இதற்காக தனது குடும்பத்தினரிடம் திருமண செலவிற்காக வைத்துள்ள பணத்தை படிப்பிற்கு செலவழிக்கும் படி வேண்டி அதன்படி விமானப்பயிற்சியை பெற்றுள்ளார்.
பிஞ்சோர் விமான மையம் மூடப்பட்டதினால் அரியானா பயணிகள் விமான போக்குவரத்து நிறுவனத்தின் துணை சங்கமான கர்னால் விமான சங்கத்தில் இணைந்து வணிக விமானங்களை இயக்கும் விமானி உரிமத்தை பெற்றுள்ளார்.
பெங்களுருவில் ஏர் டெக்கான் விமானசேவை நிறுவனத்தில் விமானியாக முதல்முறையாக பொறுப்பேற்ற ஜஸ்விந்தர் பல்வேறு வகைப்பட்ட சிறிதும் பெரிதுமான பயணிகள் விமானங்களை பல்வேறு விமானத்தடங்களில் ஓட்டியுள்ளார் தற்போது டாடா குழும நிறுவனங்களால் நடத்தப்படும் இந்திய ஏர்ஆசியா விமான நிறுவனத்தில் 2016 ஆம் ஆண்டு முதல் விமானியாக பணியாற்றி வருகிறார்.
மேற்கோள்கள் பகுப்புவாழும் நபர்கள் பகுப்புஇந்தியப் பெண்கள் பகுப்புஇந்தியப் பெண் விமானிகள்
சிக்கோடிசதலகா சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.
இது பெலகாவி மாவட்டத்தில் உள்ளது.
சிக்கோடி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று.
இத்தொகுதியின் எண் 2 ஆகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள் குறிப்பு மேற்கோள்கள் பகுப்புகர்நாடக சட்டமன்றத் தொகுதிகள் பகுப்புபெளகாவி மாவட்டம்
பிரேம் மாத்தூர் இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத்தைச் சேர்ந்த பெண் விமானியாவார்.
இந்தியாவின் முதல் பெண் விமானி மற்றும் விமானத்தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ள இவர் 1947 ஆம் ஆண்டில் தனது வணிக விமானி உரிமத்தைப் பெற்றுள்ளார் மேலும் 1949 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய தேசிய விமானப் பந்தயத்தில் வென்று சாதனை படைத்துள்ளார் ஆரம்ப கால வாழ்க்கை பிரேம் மாத்தூர் 17 ஜனவரி 1910 அன்று உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலிகாரில் பிறந்தவர்.
ஆனால் அவரது தந்தை வேலையின் காரணமாக அலகாபாத்திற்கு மாற்றப்பட்டதால் குடும்பத்துடன் அலகாபாத்திற்கு குடிபெயர்ந்து அங்குள்ள அன்னி பெசன்ட் பள்ளியில் பள்ளிப் படிப்பையும் எவிங் கிறிஸ்டியன் கல்லூரியில் உயர்நிலைப் படிப்பையும் முடித்துள்ளார்.
அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பினை பயின்றுள்ளார்.
இல் பிறந்தார்.
தொழில் வாழ்க்கை பிரேமுக்கு விமானி ஆக வேண்டும் என்ற ஆசையை விதைத்ததில் முக்கிய பங்கு வகித்தவர் கேப்டன் அடல் ஆவார்.
விமானசவாரி அழைத்து செல்லும் போது பிரேமை பயமுறுத்த அவருக்கு தெரிந்த அனைத்து விமான சாகசங்களையும் செய்தும் சிறிதும் பயப்படாமல் அதையெல்லாம் அனுபவித்த பிரேமை விமானியாக சொன்னதும் அதற்காக லக்னோ பறத்தல் மையத்தில் பேசி அலகாபாத்தில் மையம் ஆரம்பித்து பிரேமுக்கு விமானப் பயிற்சி அளித்ததும் அடலே.
அதன்படி தகுந்த விமானப்பயிற்சி பெற்று வணிக விமானங்களை ஓட்டுவதற்கான விமானி உரிமத்தையும் 1947 ஆம் ஆண்டில் பிரேம் பெற்றுள்ளார்.
ஆனால் அப்போதிருந்த எந்த ஒரு விமான நிறுவனமும் அவருக்கு வேலை அளிக்காமல் நிராகரித்தது இறுதியில் 1947 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள டெக்கான் ஏர்வேஸ் நிறுவனத்தில் இவரின் முப்பத்தெட்டாவது வயதிலே தான் துணை விமானியாக சம்பளம் ஏதும் இல்லாமல் பணிபுரிய வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
துணை விமானியாக தனது முதல் விமான பயணத்தை தொடங்கிய பிரேமுக்கு இந்திரா காந்தி லால் பகதூர் சாஸ்திரி மற்றும் லேடி மவுண்ட்பேட்டன் போன்ற உயர்மட்ட நபர்களை விமானத்தில் பறக்கச்செய்யும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.
முதன்மை விமானியாக தேவையான விமான பயண நேரங்களை பூர்த்தி செய்த பிறகும் கூட பெண் என்ற ஒரே காரணத்தினால் அவருக்கு விமானியாகும் வாய்ப்பு அந்த நிறுவனத்தால் கொடுக்கப்படவில்லை.
எனவே அங்கிருந்து வெளியேறிய பிரேம் டெல்லிக்கு குடிபெயர்ந்தார் அங்கு ஜிடி பிர்லாவின் தனியார் விமானத்தின் விமானியாக பொறுப்பேற்று பறந்துள்ளார்.
அதன் பிறகு அவர் 1953 ஆம் ஆண்டில் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானியாக பணியில் சேர்ந்து பணிக்காலம் முழுவதுமாக பணிபுரிந்து விமானத்தலைவராக ஓய்வு பெற்றுள்ளார்.
விருதுகள் பன்னாட்டு வான் போக்குவரத்து சங்க உறுப்பினர் நாடுகளில் முதலாவதாக பெண் விமானியை பணியில் அமர்த்திய நாடு என்ற பெருமையை இந்தியாவிற்கு பெற்று தந்த பிரேம் 1947 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய தேசிய விமானப் பந்தயத்தில் ஒரே ஒரு பெண் விமானியாக கலந்துகொண்டு பிற ஆண் விமானிகளை வென்று முதலாவதாக வெற்றி பெற்றுள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை பிரேம் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணா மாத்தூர் என்பவரை மணந்துள்ளார்.
இத்தம்பதியினருக்கு ஆறு குழந்தைகள் பிறந்தனர்.
பிரேம் தனது எண்பத்திரெண்டாவது வயதில் 22 டிசம்பர் 1992 அன்று வயது முதிர்வின் காரணமாக மரணித்துள்ளார் மேற்கோள்கள் பகுப்பு1992 இறப்புகள் பகுப்பு1910 பிறப்புகள் பகுப்புவானூர்தியியல் முன்னோடிகள் பகுப்புஇந்தியப் பெண் விமானிகள் பகுப்புஇந்தியப் பெண்கள்